Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்.25 ஜோடி மாடுகள் பங்கேற்பு!

J.Durai
புதன், 1 மே 2024 (15:15 IST)
சிவகங்கை அருகே புதுப்பட்டி அய்யனார்கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது.
 
இதில், 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், பெரியமாட்டுக்கு 8 கிமீ தொலைவும், சிறிய மாட்டுக்கு 7 கிமீ தொலைவும், பூஞ்சிட்டு பிரிவுக்கு 5 கிமீ தொலைவும் போட்டி எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்து.
 
பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 5 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
 
சிவகங்கை மேலூர் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில்  சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
 
பந்தயத்தை சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மூன்று பிரிவுகளாக நடந்த போட்டிகளில் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments