Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கொடூரம்’ - பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை

’கொடூரம்’ - பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (08:10 IST)
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அமிர்த மங்களம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான தாமோதரனுக்கு, அம்பிகா என்ற மனைவியும் அனுப்பிரியா (11), இந்துமதி (8) என்ற 2 மகள்களும் உள்ளனர்.


 


இந்நிலையில் அம்பிகாவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் போது மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அம்பிகாவிடம், தாமோதரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை ஆசிரமத்தில் விட்டு விடலாம் என்று தாமோதரன் கூறியதை, அம்பிகா ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு, திடீரென மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை தாமோதரன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை பார்த்து அம்பிகா கூச்சலிட்டு கதறி துடித்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த காவல்துறையினர்,  குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரனை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments