Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி...

அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி...
, வெள்ளி, 2 ஜூன் 2017 (11:37 IST)
திருமண நேரத்தில் அண்ணன் தாலி கட்ட வேண்டிய பெண்ணிற்கு, அவரின் தம்பி தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


 

 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவருக்கு மொத்தம் மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்தவர் ராஜேஷ் மற்றும் இளையவர் வினோத் ஆகிய இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ராஜேஷுக்கு  திருமணம் செய்ய நினைத்த அவரின் பெற்றோர்கள் 6 மாதத்திற்கு முன்பு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். அதன்படி கடந்த 31ம் தேதி அவர்களுக்கு திருமண நாள் குறிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் ஒரு கோவிலில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 
எனவே, பெண் வீட்டார், மாப்பிள்ளை விட்டார் மற்றும் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்தனர். மணமேடையில் இருவரும் அமர்ந்திருக்க, முகூர்த்த நேரம் வந்தது. அப்போது, மணமகளுக்கு ராஜேஷ் தாலி கட்ட முயன்றார். அப்போது அவரை தள்ளிவிட்ட அவரின் தம்பி வினோத், தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து மணமகள் கழுத்தில் கட்டினார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியைடந்தனர். 
 
மேலும், இதனால் கோபமடைந்த பெண் விட்டார், தாலி கட்டிய வினோத்தை தாக்கினார். அந்த இடமே களோபரமானது. ஆனால், மணமகள் எந்த கலக்கமும் இல்லாமல் இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் விசாரித்த போதுதான் அப்பெண்ணிற்கும், வினோத்திற்கும் காதல் இருந்தது தெரியவந்துள்ளது.
 
அதாவது, அண்ணன் ராஜேஷிற்கு பெண் பார்க்க வினோத்தும் சென்றிருந்தார். அப்போது, அப்பெண்ணை பார்த்தவுடன் வினோத்துக்கு பிடித்துபோனது. அதேபோல், அந்த பெண்ணிற்கும் ராஜேஷை விட வினோத்தை பிடித்துப்போனது. அதாவது, கண்டதும் காதலாகிப்போனது. ஆனால், இதை வெளியே கூற முடியாமல் இருவரும் தவித்துள்ளனர். இந்நிலையில்தான், அண்ணன் கட்ட வேண்டிய தாலியை, தம்பி வினோத் கட்டியது தெரியவந்துள்ளது. 
 
இதை பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஏமாற்றமும், அதிர்ச்சியுமடைந்த ராஜேஷ் கோபத்தில் தனது முகூர்த்த சட்டை மற்றும் வேஷ்டையை கழற்றி எரிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். 
 
அதன்பின், மணமகளின் பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றனர். இந்த விவகாரம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராட்சத கருவி மூலம் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது!