தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் நிலையில் பேரறிஞர் அண்ணாவுடன் விஜய் இருப்பது போல வெளியாகியுள்ள ஏஐ வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் நிலையில், விஜய் தற்போது திருச்சி, நாகை என அடுத்தடுத்து பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அண்ணாவின் கொள்கைகளே தங்கள் கொள்கை என கூறிவரும் திமுகவையும், அதிமுகவையும் மிஞ்சி அண்ணாவை சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம். தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அண்ணாவே விஜய்யை பாராட்டுவது போலவும், தம்பி வா தலைமை தாங்க வா என அழைப்பது போலவும் ஒரு வீடியோவை தயாரித்திருக்கிறார்கள் தவெகவினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கிய நிலையில், அதிமுக, திமுகவினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
Edit by Prasanth.K