Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (11:15 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிராட்வே பேருந்து நிலையம் சென்னை தீவு திடலுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக பிரம்மாண்டமாக வணிக வளாகத்துடன் கூட கட்டப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
சென்னையின் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையம் ரூபாய் 823 கோடி செலவில் வணிக வளாகத்துடன் கட்டப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி இந்த கட்டிட பணிகளை தொடங்கியுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் என்று கூறியதோடு இந்த பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது 
 
இந்த புகைப்படத்தை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் நடைமுறைக்கு வந்துவிட்டால் பிராட்வே பகுதி மிகப்பெரிய வணிக பகுதியாக மாறிவிடும் என்று கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவு திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்துதான் அனைத்து பேருந்துகளும் சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments