Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் : முற்றுகையிட்ட பொதுமக்கள்

கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் : முற்றுகையிட்ட பொதுமக்கள்
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (18:08 IST)
பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலுவலகத்தில் சுமார் 2400 பத்திரங்களை முடக்கி வைத்துள்ளதாகவும், ஒரு பத்திரத்திற்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாக கூறி சார்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்களால் கரூரில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், தினம் தினம் சுமார் பல மணி நேரம் பத்திரப்பதிவு நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேலக்கரூர் சார்பதிவாளர்காளான அன்பழகன், உதவியாளர் சுகுமார் ஆகியோர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் பத்திரப்பதிவு நடைபெற்றாலும், காலை 11.45 மணிக்கு வேலைக்கு வரும் இந்த நபர்கள், இரவு 12 மணி வரை பத்திரம் பதிவதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில் சுமார் 2400 பத்திரங்களை பத்திரம் பதிவு செய்தும் இன்றும் அவர் கஸ்டடியிலேயே வைத்துக் கொண்டுள்ளார் என குற்றம் சாட்டிய பொதுமக்கள் மற்றும் ஆவன எழுத்தர்கள், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். 
 
இன்று பத்திரப்பதிவு ஏ.ஐ.ஜி அதிகாரியான கலைச்செல்வி விசாரணை மேற்கொண்ட போது., அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் பத்திரப்பதிவர்கள், பொதுமக்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்ததோடு, சட்டபடி அதிகமாக லஞ்சம் மட்டுமே வாங்குவது தங்களது குறிக்கோளாக விளங்கும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்தனர். 
 
மேலும் விசாரணை மேற்கொண்டுள்ள ஏ.ஐ.ஜி கலைசெல்விக்கே விஷம் வைக்க முயற்சிப்பதாக அவரே புகார் கூறியுள்ளனர் என்றும், எங்களது சுமார் 2400 பத்திரங்களை மீட்டுத்தருமாறும் கூறி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தமிழக அளவில் இரவு 12 மணி வரை பத்திரம் பதியும் அலுவலர்கள், ஒரு பத்திரத்திற்கு ரூ 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த சம்பவங்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்களையும், பொது நல ஆர்வலர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil