Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (19:22 IST)
சென்னையில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நாளை வழக்கும் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
                      
சென்னையில்  இன்று 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, போலீஸார் மோப்ப  நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று போலீஸார் தரப்பில் விளக்கம் அளிகப்பட்டது.

இதுகுறித்து சென்னை கமிஷனருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். தற்போதைய நிலைமை, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை  குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், சென்னையில் அண்ணாநகர், முகப்பேர், ஓடேரி, கோபாலபுரம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு Johonsol01@gmalil.com என்ற இமெயில் முகவரில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  விரைவில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீஸார் கைது செய்வார்கள் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதில், சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும், நாளை வழக்கும் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments