Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 27 மே 2024 (10:03 IST)
சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை விமான நிலையத்திற்கு வந்த இ-மெயிலில் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
 
அதன்பின் விசாரணையில் போலி மிரட்டல் என தெரியவந்த நிலையில், இ-மெயில் அனுப்பியவரை போலீசார் தேடி வருவதாகவும், ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே விமான நிலையம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும் அதன்பின் அது வெறும் வதந்தி என தெரிய வந்து கொண்டிருப்பதும் பார்த்து வருகிறோம். 
 
இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments