Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (15:36 IST)
மதுரையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் கூறினார்.
 
இது குறித்து அப்பகுதி காவல் நியைத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வகுப்புகள் தொடங்கும் முன்பே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனடியாக அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு சோதனை பிரிவு காவலர்கள் அந்த பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த தகவல் புரளி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
சில தினங்களுக்கு முன்னர், மதுரை ஆரப்பாளையம் போருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments