Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை: பரமக்குடியில் பரபரப்பு

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (09:36 IST)
பரமக்குடி அருகே பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


 

 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கோலந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்.  35 வயதுடைய ரமேஷ் காளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
 
பிராய்லர் கோழிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். 
 
இந்நிலையில், புழுதிக்குளத்திற்கு ரமேஷ் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். பரமக்குடியை அடுத்த தென்பொதுவக்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகே சென்றபோது ஒரு கும்பல் காரை வழிமறித்து அவரை தாக்கியது.
 
அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க ரமேஷ் காரில் இருந்து இறங்கி வெளியில் ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிப் பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
 
இதில் ரமேசுக்கு உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பரமக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும், இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments