இந்தியாவை இந்துஸ்தானாக மாற்றும் முயற்சியில் பாஜக: திருமாவளவன் சாடல்!

Webdunia
வியாழன், 17 மே 2018 (12:16 IST)
கர்நாடக தேர்தல் முடிவுகள், ஆளூநரின் முடிவு ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியும் ஏற்றுவிட்டார். 
 
அடுத்து அனைவரும் சொன்னது போல பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைத்துவிடுமா என்பது அடுத்த சர்ச்சைக்குரிய கேள்வியாக உள்ளது. 
 
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பின்வருமாரு பேசினார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, தமிழக நலனுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டு மத்திய மாநில அரசுகள் முடக்கப்பார்க்கிறது. இந்நிலை தொடர்ந்தால், மக்கள் வெகுண்டு எழுவார்கள். 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசியல் அமைப்புகள் எழுச்சி பெற்று வருகிறது. அதை நசுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. 
 
இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை இலக்காக வைத்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செயல்பட்டு வருகிறது என சாடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments