Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி விவசாயி போராட்டத்தை தூண்டிவிடுவது யார்? எல்.முருகன் திடுக்கிடும் தகவல்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (18:37 IST)
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை நக்சல்கள் மற்றும் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தூண்டி வருகின்றனர் என்று எல் முருகன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டு அரசுக்கு எதிராக தூண்டி விடப்பட்டது என்றும் இந்த போராட்டத்தில் நாட்கள் நக்சல்கள் உள்ளனர் என்றும் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகளை போராட்டத்தை தூண்டி விடுகின்றனர் என்றும் கூறினார் 
 
இந்த நிலையில் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பரப்புரையை தமிழகம் முழுவதும் தமிழக பாஜக சார்பில் ஆயிரம் இடங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்த அவர் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் சட்டத் திருத்தங்களை நன்மைகளை எடுத்துக் கூற போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் வேளாண் சட்ட நன்மைகளை எடுத்துக் கூறி திமுகவின் போலி முகத்தை மக்களுக்கு காட்டவேண்டும் என்றும் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் எதிர்க்கட்சிகளால் பாஜகவின் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்கேப் ஆன ஆனந்த்.. கரூர் செல்லும் விஜய்! 20 பேர் கொண்ட குழு ஏற்பாடு!

பெங்களூரில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? சல்லடை போட்டு தேடும் தனிப்படை!

கரூர் மரணங்களுக்கு விஜய்தான் முதல் காரணம்! - சீமான் பகிரங்க குற்றச்சாட்டு!

வன்முறையாக மாறிய Gen Z போராட்டம்! 3 பேர் பலி! - மொராக்கோவில் அதிர்ச்சி!

கரூர் கூட்ட நெரிசல்: சி.பி.ஐ. விசாரணை கோரிய பா.ஜ.க. கவுன்சிலரின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments