தமிழும், திருக்குறளும் திமுகவின் சொத்து அல்ல – எல்.முருகன் கண்டனம்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (13:52 IST)
பிரதமர் பல இடங்களில் திருக்குறளை பேசுவது குறித்து மு.க.ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமரான பிறகு தமிழ் குறித்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். பல இடங்களில் பேசும்போது திருக்குறளை முன்னுதாரணம் காட்டுவது, இந்தோனேசிய மொழியில் திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தது போன்றவற்றை செய்து வருகிறார். இதுகுறித்து பேசிய மு.க.ஸ்டாலின் ”திருக்குறள் கூறுவதால் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின்  இந்த கருத்திற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “திராவிடம் பேசி பேசி இனியும் தொடர்ந்து தமிழர்களை ஏமாற்ற முடியாது. பிரதமர் தமிழில் பேசுவதையும், திருக்குறள் பேசுவதையும் விமர்சிக்கிறார்கள். தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்து அல்ல” என்று பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments