Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுகவை உள்ள சேருங்க.. இல்லைனா ஓட்டு வங்கி பாதிக்கும்!? – அதிமுகவுக்கு பாஜக ஆலோசனை??

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (10:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அமமுக- அதிமுக இணைப்பு குறித்து பாஜக பேசி வருவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் பாஜகவுக்கு 24 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அமமுகவுக்கு ஓட்டு வங்கி உள்ளதால் ஓட்டு பிரிவதை தவிர்க்க அமமுகவையும் கூட்டணியில் சேர்க்க பாஜக அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது. ஆனால் அமமுகவை கூட்டணியில் இணைக்க அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி பங்கீடு பிரச்சினை ஏற்படும் என கருதினால் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதிகளில் கணிசமாக விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் கூட்டணி குறித்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்போதே பல தகவல்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments