Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை பாஜக நிர்வாகிகளுக்கு மேலிடம் முக்கிய உத்தரவு: பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:16 IST)
புதுவையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் இன்னும் அம்மாநிலத்தில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வில்லை என்பதும் அமைச்சர்கள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல்வர் ரங்கசாமி மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்படும் குழப்பம் காரணமாக அசாதாரண நிலை அங்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் புதுவை பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக மேலிடம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
புதுவையில் சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவி ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என புதுவை பொருப்பாளருக்கு பாஜக தலைமை உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் பொதுவெளியில் பேச கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுவையில் சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவி மற்றும் ஒரு துணை முதல்வர் பதவியை பாஜக கேட்பதாகவும், அதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments