ஹெச். ராஜா மீது புகார் - மூவரை கட்சியில் இருந்து விலக்கிய தலைமை!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (10:02 IST)
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஹெச். ராஜா மீது புகார் அளித்த காரைக்குடி நகர தலைவர் சந்திரன் மற்றும் சிலர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
பாஜகவின் காரைக்குடி பெருநகர தலைவராக இருப்பவர் சந்திரன். இவர் காரைக்குடி தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டு அதற்காக வேலை செய்து வந்தார். ஆனால் ஹெச் ராஜா தோல்வி அடைந்த நிலையில் சந்திரன் மேல் ஹெச் ராஜா தரப்பு கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 
 
இந்நிலையில் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஹெச் ராஜா சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் என் உழைப்பின் மேல் சந்தேகப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் அவரின் மருமகன் என்னை மிரட்டுகிறார். ஹெச் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன் எனக் கூறியுள்ளார்.
 
மேலும் அவர், தேர்தல் செலவுக்காக கட்சி கொடுத்த தொகையை ஹெச் ராஜா செலவு செய்யவில்லை. அதை பதுக்கிவிட்டார். இப்போது அவர் 4 கோடி ரூபாயில் வீடு கட்டி வருகிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். இது பாஜகவுக்குள் உள் கட்சி பூசலை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஹெச். ராஜா மீது புகார் அளித்த காரைக்குடி நகர தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல தலைவர் ஆகியோர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜனால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments