Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேண்ட்டை ஈரமாக்கிவிடுவீங்க... கார்ட்டூனிஸ்ட் பாலாவை வெளுத்த குஷ்பு!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:54 IST)
உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு குஷ்பு பதிலடி. 
 
கடலூரில் தமிழக பாஜக தலைவர்கள் வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டனர். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன், துணை தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கடலூருக்கு இன்று சென்றனர். கடலூர் செல்லும் வழியில் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரிமோதி கடும் விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். 
 
இந்நிலையில் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கார்ட்டூனிஸ்ட் பாலா தனது ட்விட்டரில் நடிகை குஷ்பு கார் விபத்துக்குள்ளான புகைப்படத்தை பதிவிட்டு, குஷ்பூ அவர்கள் மிகச்சிறந்த நடிகை என்பதை  உறுதிப்படுத்தும் புகைப்படம். டியர் சங்கிஸ்.. ஸ்கிரிப்ட்டை ஒழுங்கா எழுதுங்க.. நிறைய ஓட்டை இருக்கு பாருங்க.. என எழுதியிருந்தார். 
 
இதனை கண்டு ஆத்திரமடைந்த குஷ்பு, கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் போராடிய ஒருவர் இப்படி பேசுவதை கேட்டு வெட்கப்படுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், போலியான விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். 
 
நீங்கள் மரணத்தை சந்திக்கும் அந்த நிமிடம் உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது. உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களது பேச்சு கோழைத்தனமாக உள்ளது. விரைவில் குணமடையுங்கள் பாலா என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments