Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி தொல்லை தாங்காமல் சொந்த காரை தானே எரித்த பாஜக நிர்வாகி!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (12:30 IST)
சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது. 

 
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவருடைய கார் தீப்பிடித்து எரிந்தது.
 
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், துணியை பெட்ரோலில் நனைத்து காரின் நான்கு பக்கங்களிலும் துடைத்து உள்ளார். அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்துவதும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
 
சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு கட்சி ரீதியாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். 
 
இந்நிலையில் சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தீ வைத்துவிட்டு மர்மநபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். காரை விற்றுவிட்டு நகை வாங்கித்தரும்படி மனைவி தொல்லை கொடுத்ததால் காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments