Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு உரிமையுண்டு- வைத்தியலிங்கம்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:01 IST)
அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடவும், எங்களை ஒன்றுபடுத்தவும் எல்லா உரிமையும் பாஜகவுக்கு உள்ளது என அதிமுகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி ரத்து செய்தார். இந்தத் தீர்ப்பை பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. இது அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

 
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார்.  இந்த மனு குறித்து விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும், இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது,"  என்று  உச்ச நீதிமன்ற அமர்பு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அதிமுக 3ஆகப்  3  ( ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன்) பிரிந்துள்ள நிலையில், ஏற்கனவே அதிமுகவினர் பாஜகவின் ஆலோசனையின் படி நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம்  ஊடகத்திற்கு ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதில்,தேசிய ஜன நாயகக் கூட்டணியில் நாங்கம் அங்கம் வகிக்கிறோம்….. அதன் அடிப்படையில், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடவும், எங்களை ஒன்றுபடுத்தவும் எல்லா உரிமையும் பாஜகவுக்கு உள்ளது…..எனவே விரைவில் கட்சி விஷசமாக ஓபிஎஸ் விரைவில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments