Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”உங்கள நம்பி சீட் குடுத்ததுக்கு..” ஜம்ப் அடித்த வேட்பாளர்கள்! – அதிர்ச்சியில் பாஜக!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (15:36 IST)
நகர்புற சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில் பாஜக வேட்பாளர்கள் கட்சி தாவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தனித்து போட்டியிடும் நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்னதாக ஆறுமுகநேரி பகுதியில் 4வது வார்டு வேட்பாளராக ரேணுகா தேவி என்பவரை பாஜக அறிவித்திருந்தது. ஆனால் அவர் திடீரென திமுகவுக்கு கட்சி மாறியதுடன், திமுக சார்பில் அந்த தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து பாஜக மீள்வதற்குள் அடுத்த வேட்பாளர் கட்சி மாறியுள்ளார். ஆறுமுகநேரி 17வது வார்டில் பாஜக சார்பில் சண்முகம் என்பவர் போட்டியிடுவார் என பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவுடன் இணைந்ததுடன், அதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தங்கள் வேட்பாளர்கள் திடீரென கட்சி தாவும் சம்பவம் பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

இன்று மீண்டும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீடு செய்ய சரியான நேரமா?

ரூ.73000க்கும் குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments