விஜய் தங்களது தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது- கோவை சத்யன்

Sinoj
சனி, 3 பிப்ரவரி 2024 (18:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நேற்று  தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சி பற்றி அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களது தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் நாட்டில் வளர்ந்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்குமாறு கூறி வற்புறுத்தினார்கள், ஆனால் அவர் தப்பித்துவிட்டார். அடுத்த தூண்டில் விஜய்தான். கமிழ் நாட்டில் வளர்ச்சியைப் பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments