Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (14:45 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், ''திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக  பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில்,  பாஜக  மாநிலத் துணைத் தலைவர் திருமதி  சசிகலா புஷ்பா அவர்களின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கிய திமுகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று  அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments