Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயரு கியருனு பேசிட்டு பொசுக்குனு அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (13:33 IST)
உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும் என அண்ணாமலை டிவிட்டர் பதிவு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் நேற்று பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை ”தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 2 ஆயிரம் என வழங்குவதுதான் தமிழக அரசியல். 
 
இந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தலைக்கு மேல் லைட் வைத்து செல்பவர்களும், டயருக்கு கீழ் விழுந்து கும்பிடு போடுபவர்களும்தான் ஆட்சிக்கு வருவார்கள் என பேசியுள்ளார். இது மறைமுகமாக அதிமுக பிரமுகர்களை தாக்கும்படி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
 
இதனால் இப்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் நேரத்தில் ரூ.2,000-த்தை ஓட்டுக்காக வழங்குவதையே நான் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் நான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ.2,500 குறிப்பிட்டதாக தவறாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும் என டிவிட்டர் பதிவு போட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments