Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர முடியுமா? முடியாதா? ரஜினிக்கு அமீத்ஷா கெடு!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (04:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியலுக்கு இழுக்கவும், அவருடைய ஆதரவை பெறவும் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள் முயற்சித்து வந்தாலும், தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளது.



 


குறிப்பாக தமிழகத்தில் செல்வாக்கின்றி இருக்கும் பாஜக ரஜினியின் இமேஜை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றது. ஆனால் அரசியலுக்கு வருவது என்றால் தனிக்கட்சிதான் என்ற முடிவில் இருக்கின்றார் ரஜினிகாந்த்

ஆனாலும் பாஜக அவரை விடுவதாக இல்லை. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் ரஜினி ஆதரவு இருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைத்துவிடலாம் என்றே பாஜக உறுதியாக நம்புகிறது. இதுவரை பணிந்து கேட்ட பாஜக முதல்முறையாக மிரட்டல் தொனியில் ரஜினியிடம் பேசியதாக தெரிகிறது.

பாஜகவுக்கு வரமுடியுமா? முடியாதா? என்று தூதர் ஒருவர் மூலம் ரஜினியிடம் அமீத்ஷா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையும் ரஜினியிடம் இருந்து 'நோ' பதில் வந்தால் வழக்கமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இதனால் ரஜினி வீட்டுக்கு எந்த நேரமும் வருமானவரி ரெய்டு வரவும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments