Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-விடம் ஊதியம் பெரும் வேலையாள்கள் தான் கம்யூனிஸ்ட்டுகள்: ஹெச்.ராஜா

Mahendran
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:44 IST)
திமுகவிடம் ஊழியம் செய்யும் பணியாளர்களே கம்யூனிஸ்கள் என்று பாஜகவின் ஹெச் ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சாம்சங் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஹெச் ராஜா, திமுகவிடம் 25 கோடி வாங்கியவர்களே கம்யூனிஸ்கள் என்றும், திமுகவுடன் ஊதியம் பெறும் வேலைக்கு பணியாளர்களே இவர்கள் என்றும் தெரிவித்தார். 
 
சாம்சங் நிறுவனத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையில், குறைவானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். 
 
சாம்சங் நிறுவனத்தை நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் சிஐடியு நோக்கம் என்றும், அவர்களும் வெளிமாநிலங்களுக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் கேரளாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி விட்டன, அதேபோல் தமிழகத்திலும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால், திமுக இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவின் பல இடங்களில் சீனாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளன; அங்கே எல்லாம் தொழிற்சங்கம் வேண்டுமென சிஐடியு போராடுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments