Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்; பாஜக, ஸ்டாலின், விஜயகாந்த் கூட்டணி - சுப்பிரமணிய சாமி

பாஜகவுடன் ஸ்டாலின், விஜயகாந்த் கூட்டணி; ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் - சுப்பிரமணிய சாமி

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (18:23 IST)
பாஜகவுடன் ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் கூட்டணி வைப்பார்கள் என்று நம்புவதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
 

 
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கட்சிகள் வலுவான கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரி கட்சிகள் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில், மக்கள் நல கூட்டணியை ஏற்படுத்தி உள்ளனர்.
 
பாமகவோ திமுக, அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், அன்புமணி ராமதாஸை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன. முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளன.
 

 
இந்நிலையில், கூட்டணி குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள சுப்பிரமணிய சாமி, “கருணாநிதி முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிப்பார் என்று நம்புகிறேன். அதன்பிறகு, பாஜகவுடன் ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இணைந்து புதிய கூட்டணி உருவாகும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

Show comments