நடிகர் சரத்குமார் பிறந்தநாள்- அண்ணாமலை வாழ்த்து

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (12:52 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரத்குமாரின் 69 வது பிறந்தநாளில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துகள் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரத்குமார். இவர். விஜயாகாந்த் ஹீரோவாக நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில்  நடித்துப் பிரபலமானார். அடுத்து புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, ஐயா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடித்து வந்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

சமீபத்தில் அசோக் செல்வனுடன் அவர் இணைந்து நடித்த போர் தொழில் என்ற படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில், இன்று சரத்குமாரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சினிமாத்துறையினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிறந்த நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு  சரத்குமார் அவர்களுக்கு,  தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments