Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் இளைஞரை துண்டு துண்டாக வெட்டிய கணவன் -மனைவி: ஈரோடு அருகே பயங்கரம்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (07:25 IST)
தமிழகத்தில் தற்போது பீகார் உள்பட பெரும்பாலான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நல்ல சம்பளம், பாதுகாப்பு ஆகியவை காரணமாக வட இந்திய இளைஞர்கள் வேலைக்காக தமிழகத்தை நோக்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக வந்த ஒரு இளைஞரை ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் துண்டு துண்ட்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரோடு அருகே உள்ள ராசாம்பாளையம் என்ற பகுதியில் நவீன்குமார் என்ற பீகார் மாநில இளைஞர் பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்த  இளைஞரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்ததாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் இந்த தம்பதிகளின் பெயர் நிதிஷ்குமார்- சசி என்று தெரிய வந்துள்ளது. 

மேலும் இந்த தம்பதியர் நவீன்குமாரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை 3 சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்துள்ளதாக திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த தம்பதியரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments