Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் மோசடி - இந்த வீடியோவை பாருங்கள்...

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (18:37 IST)
நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது.


 

 
இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. 
 
இதில் முக்கியமாக, அந்த வீட்டில் ஒரு அறை இருக்கிறது. பிக் பாஸ் யாரிடம் பேச விரும்புகிறாரோ அவர்களை ஒலிப்பெருக்கியில் அழைத்து அந்த அறையில் கட்டளைகள் இடுவார். அவர்களுக்கான ஒவ்வொரு செய்தியும் அந்த அறையில்தான் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடிகை ஆர்த்தி பிக்பாஸ் அறைக்குள் செல்லும் போது ஒரு நபர் உள்ளிருந்தவாறு கதவை மூடுவதுபோல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. உற்றுப்பார்த்தால் ஒருவரின் கை, அந்த கதவை திறந்து மூடுவது நன்றாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 
இந்த வீடியோவை சிலர் வெளியிட்டு  ‘பிக் (ப்ராடு) பாஸ்’ என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அது ஆர்த்தியின் கைதான். எதிரே கண்ணாடி இருப்பதால் பிம்பம் அப்படி தெரிகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments