Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த பெரிய கட்சிகள்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (19:41 IST)
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை டெபாசிட்டை இழந்துள்ளன.


 

நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெற்றது. இத்தேர்தலில், திமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு பெறும் வேட்பாளர்கள் மட்டுமே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 57 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இங்கு டெபாசிட் தொகையை பெறுவதற்கு, 33 ஆயிரத்து 843 வாக்குகள் பெற வேண்டும்.

இதேபோல, 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவான அரவக்குறிச்சி தொகுதி யில் 27 ஆயிரத்து 430 வாக்குகளும், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவான தஞ்சாவூர் தொகுதியில் 31 ஆயிரத்து 65 வாக்குகளும், பெற வேண்டும்.

ஆனால், பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றன. இதனால், அந்தக் கட்சிகள் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments