ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி யாருக்கு? : களை கட்டும் பெட்டிங்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (10:03 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சேலம் மாவட்டத்தில் வெள்ளி கட்டிகளை வைத்து பெட்டிங் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.

 
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.  இதனையடுத்து, இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சேலத்தில் பெட்டிங் சூடுபிடித்துள்ளது. சேலத்தில் வெள்ளி தொழில் அதிகமாக நடப்பதால் தொழிலாளர்கள் 100 முதல் 500 கிராம் வரையும், பட்டறை உரிமையாளர்கள் கிலோக்கணக்கிலும் பந்தயம் கட்டுவதாக கூறப்படுகிறது.
 
கடந்த பொதுத்தேர்தல் வரை திமுகவினரும் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பதால் இந்த முறை அவர்கள் பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்களை இழுக்கும் பொருட்டு இரு மடங்கு வெள்ளி கட்டிகள் மற்றும் இரு மடங்கு தொகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments