Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்க்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெற வாழ்த்துகள்! - ராமதாஸ்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (22:12 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி  பெற்றுள்ள  நிலையில், பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது

நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை முதலாக வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்றது.

மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்க மூத்த தலைவர்கள்  இன்று மல்லிகார்ஜூனே கார்கேவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் புதிய காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில்  பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கார்கே தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தொண்டர்களின் தலைவர். அவரது தலைமையில் காங்கிரஸ் வலுப்பெற வாழ்த்துகள்!’’ என்று பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments