Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீலா ராஜேஷ் பற்றி அவதூறு பரப்பிய மர்ம நபர்! சைபர் க்ரைம் வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (09:46 IST)
தமிழகத்தின் சுகாதாரச் செயலாளரான பீலா ராஜேஷ் மீது அவதூறு பரப்பிய நபர் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மேற்பார்வையிட்டு வரும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தினசரி நிலவரங்களை தெரிவித்து வந்தார். ஒருமுறை செய்தியாளர் சந்திப்பின் போது பீலா ராஜேஷ், கொரோனா முதல் நோயாளி பிப்ரவரியிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மற்றொரு முறை மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் அவதூறு பரப்பியுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் காவல்துறையில் புகார் அளித்தார். அவரின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர் என்று பதிந்துள்ளனர். மேலும் அந்த நபர் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

6 சமோசா லஞ்சம்..! பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பஞ்சாயத்து! - உ.பி போலீஸின் ஈனச் செயல்!

திருமணமான நான்கே நாளில் புதுப்பெண் தற்கொலை! தமிழகத்தை உலுக்கும் வரதட்சணை கொலைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments