Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணத்தின் மர்மம்: அம்பலப்படுத்தியது மின்னஞ்சல் தகவல்!

ஜெயலலிதா மரணத்தின் மர்மம்: அம்பலப்படுத்தியது மின்னஞ்சல் தகவல்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (12:59 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அவரது சிகிச்சை குறித்தான வெளிப்படையான தகவல் வேண்டும் எனவும் அது குறித்த விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை என்டிடிவி நிரூபர் பர்கா தத் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை பணியாளர் இருவருக்கும் இடையேயான மின்னஞ்சல் கருத்து பரிமாற்றம் அம்பலப்படுத்தியுள்ளது.


 
 
நிரூபர் பர்கா தத்தின் மின்னஞ்சல் உறையாடலில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது என அந்த மருத்துவமனை பணியாளர் கூறியதாக உள்ளது.
 
இதன் மூலம் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள் ஏன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகள் எழும்புகின்றன. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க ஏன் அனுமதிக்கப்படவில்லை.
 
நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாவால் ஏன் அவரது புகைப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்த மின்னஞ்சல் உறையாடல் மூலம் ஜெயலலிதா ஓரளவுக்கு குணமாகி இருந்தாலும் அவர் முழுமையாக குணமாகவில்லை. ஆனால் அவரது மூளை செயல்பட்டுக்கொண்டு தான் இருந்தது.
 
ஆனால் அவருக்கு மாரடைப்பு வந்த பின்னர் மருத்துவர்கள் தங்கள் நிலையை மாற்றி அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது அது சப்போர்ட்டுடன் இயங்குகிறது என கூறினர். மாரடைப்பு வந்த பின்னர் உடனடியாக அவரது கல்லீரல் செயல்படாமல் போக வாய்ப்பே இல்லை. இப்படி இருக்கும் போது மருத்துவர்கள் ஏன் அவரது கல்லீரல் இயங்கவில்லை என்பதை மறைத்தனர்.
 
அவர் நன்றாக சாப்பிடுகிறார், பிஸியோதெரபி சிகிச்சையில் உள்ளார் என ஏன் கூறினார்கள்?. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமடைந்தது வரை மருத்துவர்கள் உண்மையை கூறவில்லை என்பது மட்டும் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் தகவல் மூலம் இது மனித தவறால் மற்றும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மரணம் என்பது மட்டும் தெரிகிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments