Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரி வெயிலின்போது வெப்பம் எப்படி இருக்கும்? சென்னையில் கோடை மழையா? பாலச்சந்திர மேனன்..!

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (16:38 IST)
தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திர மேனன் சற்றுமுன் பேட்டியளித்தபோது கத்தரி வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்

கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் ஏற்கனவே அதிக வெப்பத்தால் அவஸ்தைப்படும் பொதுமக்கள் நாளை முதல் கூடுதல் வெப்பத்தை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் மேனன் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது கத்தரி வெயிலை பொருத்தவரை முதல் ஒரு வாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் தமிழக உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் மே 6ஆம் தேதிக்கு வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசப்படும் என்றும் தெரிவித்தார்

காலநிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை என்று கூறிய அவர் சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் சென்னையில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்

ஆனால் அதே நேரத்தில் அடுத்த ஐந்து தினங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும் என்றும் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் மே 7ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments