பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

J.Durai
திங்கள், 17 ஜூன் 2024 (13:24 IST)
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. 
 
சிவகங்கை ஈத்கா திடலில் சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 
 
இந்த சிறப்பு தொழுகையில் பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் இன்று காலை 6- 45 மணிக்கு துவங்கிய இந்த சிறப்பு நிகழ்வு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்குப் பின்னால் நபி இப்ராஹிம்  அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதனுடைய இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு  பங்கிட்டு கொடுக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 
இஸ்லாமியரின் சிறப்பு தொழுகையை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments