Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் இந்த முருகன்? போலீஸுக்கு தண்ணி காட்டி சிக்காமல் இருப்பது எப்படி?

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (14:37 IST)
20 வருடங்களாக திருட்டு தொழிலில் ஈடுப்பட்டு வரும் முருகன் மற்றும் கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். 

 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  
 
நேற்று இது தொடர்பாக 6 வடமாநிலத்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த நிலையில், தற்போது உண்மையான குற்றவாளி சிக்கியுள்ளான். ஆம், திருவாரூரில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு  நபரிடம் சோதனை செய்தனர். 
அப்போது அந்த நபரிடம் 5 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. அந்த நகைகளின் பார்கோடை சோதனை செய்ததில் அது லலிதா ஜுவல்லரியில் திருட போன நகைகளின் பார்கோடுடன் ஒத்துபோனது. இதனால், அந்த நபரை கைது செய்தனர். அவன் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்துள்ளது.  
 
இவனுடன் திருடிய இன்னொருவன் சீராத்தோப்பு சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர். மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த 5 கிலோ தன்னுடைய பங்கு அதை பெற்றுக்கொண்டு வந்த போது சிக்கிவிட்டேன் என தெரிவித்துள்ளான். மணிகண்டனிடம் இருது 5 கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
மேலும், இந்த திருட்டுக் கும்பலுக்கு தலைவனாகச் செயல்பட்டவன் முருகன். இவன், பல்வேறு திருட்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வருபவன். இவன் ஏற்கனவே தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டியுள்ளான். 
 
கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இந்த முருகனை போலீஸார் ஒரு முரை கைது செய்து சிரையில் அடைத்தார்களாம். அதன் பின்னர் சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் இது போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து வந்துள்ளான். 
 
20 வருடங்களாக இந்த திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் முருகன், போலீஸில் சிக்காமல் இருக்க காரில் சுற்றிய வண்ணமே இருப்பானாம். வழக்கு குறித்த கவனம் குறைந்ததும் திருடிய நகைகளை நாகப்பட்டிணத்தில் உள்ள ஒருவரிடம் விற்றுவிட்டுவான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments