Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை பார்க்க வர வேண்டாம் - திமுக கோரிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (21:20 IST)
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என திமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 

 
உடல்நலக்குறைவு காரணமாக, கருணாநிதி கடந்த சில நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து அவரை சந்திக்க வர வேண்டாம் என திமுக சார்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை காவேரி மருத்துவ மனை யில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று, நேற்றையதினம் (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும், தலைவர் கலைஞர் அவர்கள் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டு மென்றும், அதுவரை “நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். 
 
எனவே தலைவர் கலைஞர் அவர்களைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் ஒத்துழைக்க வேண்டுமென்று அன்புகூர்ந்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments