Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (14:36 IST)
அடுத்த 2 மாதங்களில் ஆட்டோ கட்டணங்களை மறுநிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய ஓராண்டு கால அவகாசம் கொடுக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
 
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்த இரண்டு மாதத்துக்குள் ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடார்.
 
இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு, ஆட்டோ கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments