Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்காவை காதலித்ததால் அத்தை, மாமாவுக்கு துப்பாக்கி சூடு: நெல்லையில் பரபரப்பு

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (13:19 IST)
நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தனது அக்காவை மாமன் மகன் காதலித்ததால், அத்தை மாமாவை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நெல்லை மாவட்டம் வள்ளுயூர் அருகே உள்ள குமாரபுதுகுடியிருப்பை சேர்ந்த ராஜ் என்பவர் பைனான்சியராக உள்ளார். இவரது மனைவி பால்கனி, இவர்களுக்கு கவிதா, சிம்சன் என்று இரு பிள்ளைகள் உள்ளனர். கவிதா இன்ஜினியர், சிம்சன் சட்டக்கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.
 
பால்கனி தம்பி சிவக்குமாரின் மகன் இசக்கிமுத்து மற்றும் கவிதா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு அவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிவக்குமார், சிம்சன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிம்சன் ஆத்திரமடைந்து அவரது அத்தை மற்றும் மாமாவை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
 
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:-
 
இசக்கிமுத்து மற்றும் கவிதா காதலித்து வந்துள்ளனர். இசக்கிமுத்து அதிகம் படிக்காத காரணத்தினால் கவிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்