Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

Prasanth Karthick
ஞாயிறு, 4 மே 2025 (10:53 IST)

பெரம்பலூர் அருகே கிராமத்தில் மின்சாரம் வைத்து மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் அந்த மின்சாரத்திலேயே சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரம்பலூர் அருகேயுள்ள தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் மற்றும் தினேஷ் என்ற இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக நூதனமாக திட்டமிட்ட அவர்கள் அப்பகுதியில் உள்ள  மின்கம்பத்தில் வயரை இணைத்து அதை ஆற்றில் போட்டு மீன் பிடிக்க முயன்றுள்ளனர்.

 

அவ்வாறாக மின்கம்பத்தில் இணைத்து ஆற்றில் அவர்கள் வயரை வீசிய நிலையில் தவறுதலாக மின்சாரம் அவர்கள் மீதே தாக்கி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவர்கள் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதிகளில் அடிக்கடி சிலர் இதுபோல மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயல்வதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments