Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்பானத்தில் விஷம்.. மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள்.. 3 பேர் கைது..!

Siva
ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (11:35 IST)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, 77 வயது மாமியாரை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தனலட்சுமிக்கு, சரவண பெருமாள் என்ற மகன் இருந்தார். அவருக்கு தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனலட்சுமி தனது மகனிடம், "மருமகளை பிரிந்து வந்தால், உனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறேன்" என்று ஆசை காட்டியதாகவும், "அப்போதுதான் சொத்தில் பங்கு தருவேன்" என்று கூறியதாகவும் தெரிகிறது.

மாமியாரின் திட்டத்தை புரிந்துகொண்ட தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்து கணவரை பிரிக்க நினைப்பதை உணர்ந்து, அவரை கொலை செய்ய முடிவு செய்தார். "மாமியாரை கொலை செய்தால், தனக்கு சொத்து முழுவதுமாக கிடைத்துவிடும், பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்" என்று கருதிய தமிழ்ச்செல்வி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

தமிழ்ச்செல்வி தனது தாயாருடன் சேர்ந்து தனது மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில், மாமியாருக்கு விஷம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த தனலட்சுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே தான் மருமகளே விஷம் கொடுத்தார் என்பது தெரிய வந்தது.

சொத்துக்காக ஆசைப்பட்டு, மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் தமிழ்ச்செல்வி, அவரது தாயார் பத்மாவதி மற்றும் உடந்தையாக இருந்த கோமதி ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் இதுதான்: அன்னா ஹசாரே

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

படிக்காதவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது: கடம்பூர் ராஜு

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments