போலீஸ் மீது மீண்டும் தாக்குதல்: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் கைது

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (09:08 IST)
சமீபத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சீருடை அணிந்த காவலர்களை அடித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலானது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இதனை மறுத்தார். காவலர்களை தாக்கியது தனது கட்சியை சார்ந்தவர் இல்லை என்று சீமான் கூறினார்
 
இந்த நிலையில் நேற்று சென்னை தி.நகர் பகுதியில் ரோந்து வாகனம் ஒன்றை சில மர்ம நபர்கள் கல்லால் தாக்கி சேதப்படுத்தினர். இந்த மர்ம நபர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது, ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும், மீதி நான்குபேர் தப்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
பிடிபட்ட நபரின் பெயர் கார்த்தி என்றும் இவரிடம் நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டை இருந்ததாகவும், அதுமட்டுமின்றி அவர் போதையில் இருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்தி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான 4 பேர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments