Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரன் ஜோதிடர்களின் கட்டுப்பாட்டில்!

டிடிவி தினகரன் ஜோதிடர்களின் கட்டுப்பாட்டில்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (09:08 IST)
அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஆர்கே நகர் தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக களத்தில் குதித்துள்ளார்.


 
 
தேர்தல் பணிக்கு மிகப்பெரிய அணியை உருவாக்கி பம்பரம் போல சுழன்று வருகிறார். ஆனால் அந்த பம்பரம் எப்படி சுழல வேண்டும், எவ்வளவு நேரம் சுழல வேண்டும் என்பதை வேறு ஒருவர் தான் தீர்மானிக்கிறாராம். சசிகலா சிறைக்கு சென்றதை அடுத்து கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டிடிவி தினகரன் ஜோதிடர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
டிடிவி தினகரனுக்கு முதலில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு பின்னர் தொப்பி சின்னம் தான் வேண்டும் என பெற்றதும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதானாம். இரும்பு பொருட்கள் தினகரனுக்கு ஆகாதாம் அதனால் தான் ஆட்டோ சின்னம் வேண்டாம் என கூறப்பட்டதாம்.
 
டிடிவி தினகரன் எப்பொழுது எந்த திசையில் எங்கு பிரச்சாரத்தை ஆரம்பித்து, எந்த திசையில் எங்கு முடிக்க வேண்டும் என்பதை ஜோதிடர்தான் முடிவு செய்கிறாராம். தினகரனும் அதனை இம்மி பிசகாமல் கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு நகர்வையும் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே எடுத்து வைக்கும் டிடிவி தினகரன் இதற்காக சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடர்களை நாள்தோறும் வீட்டுக்கு வரவழைத்துவிடுகிறாராம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments