Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தால் சென்னை ஸ்தம்பிக்கும்: வேலூர் ஜோதிடர் கணிப்பு!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (13:03 IST)
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு அதிகமான சூறாவளி காற்று மற்றும் மழையால் தமிழகம் முழுவதும் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஓகி புயலால் கன்னியாகுமரி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு மீண்டும் ஒரு புயல் ஆபாயம் நிலவி வருகிறது. 
 
பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு, தமிழகத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும், ஆறுகளில் வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு உறை பனி வீசும் என்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், விமான விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும், சென்னையில் மின்கசிவு ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும், டிசம்பர் 9 முதல் 12 வரை சென்னையில் கனமழை பெய்யும், நகரம் வெள்ளத்தில் மிதக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர், கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்தது. அதே போல புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
எனவே, முன்னர் கூறியது நடந்ததால், அடுத்தடுத்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments