Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: அருண் ஜேட்லி

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2015 (12:59 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும் என்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.


 


தமிழகத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும்.
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து இழப்பீடு கோரி 11 ஆயிரம் விண்ணப்பங்கள் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களுக்கு வந்துள்ளன.
 
அடுத்த 4 வாரங்களுக்குள் காப்பீடு பலன்களை அளிக்க காப்பீடு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வங்கிகளின் சார்பில் மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகள் சார்ப்பில் வழங்கப்படும் உதவிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து குழு அனுப்பபடும்." என்று அருண் ஜேட்லி கூறினார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments