Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் 6 மாதம் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (23:52 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக விசாரணையை நடத்தி வருகிறது.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா, அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் டிசம்பர் 25ந்தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியருப்பதால் இந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க நீதிபதி ஆறுமுகச்சாமி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments