Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.கருணாநிதியின் பேரன் நடிகர் அருள்நிதிக்கு முன்னாள் நீதிபதியின் மகளுடன் திருமணம்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (13:08 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகனான மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவை மணக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது.


 
 
அருள்நிதி பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘மௌனகுரு’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்‘, ‘டிமாண்டி காலணி’ ஆகிய படங்கள் வெளிவரவிருக்கிறது.
 
இந்நிலையில் அருள்நிதிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இவர், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் கீர்த்தனாவை மணக்கவிருக்கிறார்.
 
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரு குடும்பத்தாரும், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!