Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுங்கு வாங்கியதால் தகராறு.. மண்டை சூடாகி மனைவி, மகளை குத்திய கணவன்! – தருமபுரியில் அதிர்ச்சி!

Prasanth Karthick
சனி, 11 மே 2024 (12:38 IST)
தருமபுரியில் நுங்கி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கணவன் தனது மனைவி, மகளை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் வசிப்பவர் தனசேகரன். லாரி டிரைவரான தனசேகரனுக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி, ஷபானா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வரும் நிலையில் வெளியே கடைக்கு சென்ற யாசினி வரும்போது நுங்கு வாங்கி வந்துள்ளார்.

ஆனால் அவர் அதிக விலைக்கு நுங்கு வாங்கிவிட்டதாக தனசேகரன் சண்டை போட்டதாக தெரிகிறது. பதிலுக்கு யாசினியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருசமயம் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தனசேகரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி யாசினியை சரமாரியாக குத்தியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மகள் சாந்தினி தடுக்க முயன்றபோது அவருக்கும் சில கத்திக்குத்துகள் விழுந்துள்ளது.

ALSO READ: திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு.. 5 பேருக்கு படுகாயம்..!

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக யாசினியையும், சாந்தினியையும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தனசேகரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தனசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நுங்கு வாங்கியதால் ஏற்பட்ட பிரச்சினையில் தாய், மகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments