Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் அனைவருமே சாத்தானின் பிள்ளைகள்தானோ? சீமானின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரபல இயக்குநர்

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (13:09 IST)
‘’கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் ‘’ என்று சீமான்,சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில் இதற்கு பிரபல இயக்குனர் நவீன் பதிலடி கொடுத்துள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான். இக்கட்சியின் சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடி இன மக்களுக்கு எதிரான அநீதியைக் கண்டித்து,  நேற்று  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமமான், மணிப்பூரில் இருந்து மக்கள் யாரும் வந்து நமக்கு ஓட்டுப்போவதில்லை, இங்கேயுள்ள கிருஸ்தவர்களும் நமக்கு ஓட்டளிக்கப் போவதில்லை… கிருஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள்  தேவனின் பிள்ளைகள் என்று  நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் நவீன் தன் டுவிட்டர் பக்கத்தில் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘50 வருடங்களாக தமிழர்கள் அனைவருமே இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்றிற்குத்தான் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள். அப்படியானால் தமிழர்கள் அனைவருமே சாத்தானின் பிள்ளைகள்தானோ?! அண்ணன் கூட பத்து வருடங்களுக்கு முன்னர்வரை சாத்தானின் பிள்ளையாகத்தான் இருந்திருக்க கூடும். அசுரர்கள் சாத்தான்களே!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments